Skip to main content

தேனியில் பணம் ஆறாக ஓடுகிறது;மக்கள் பணத்தின் மீது நடந்து செல்கிறார்கள் -கே.எஸ்.அழகிரி

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

 

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்  கே.எஸ். அழகிரி சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது,   எனது 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக நடந்ததை கண்டதில்லை.  கரூர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி  மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கிறார்.  அதற்கு அவர்  அரசியல்வாதி போல் நடந்துகொள்கிறார். மாவட்ட ஆட்சியர்  பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.  இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மாவட்ட ஆட்சியரை உடனடியாக தேர்தல் ஆணையம் மாற்ற வேண்டும் .

 

a

 

காவல்துறை ,  வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு சார்பாக செயல்படுகிறது . ஜனநாயக மரபை மோடி மறந்து செயல்படுகிறார். தூத்துக்குடியில்  கனிமொழி மீது தவறான எண்ணத்தை உருவாக்க  அவரது வீட்டில் ரெய்டு நடத்தி மிரட்டியுள்ளனர்.  70 ஆண்டுகளாக ஜனநாயகத்தை அழிக்கும் வேலையை பாரதிய ஜனதா கட்சியும், அதிமுகவும் செய்து வருகிறது.  

 

எல்லா தொகுதியிலும் பணம் பட்டுவாடா நடந்து வருகிறது தேனியில் பணம் ஆறாக ஓடுகிறது,  மக்கள் பணத்தின் மீது நடந்து செல்கிறார்கள். அங்கு தேர்தலை நிறுத்தாமல் வேலூரில் மட்டும் நிறுத்தியுள்ளனர்.  கரூரில் தேர்தலை நிறுத்த அனைத்து வேலைகளும் செய்து வருகிறார்கள்.  வருமானவரி துறையினருக்கு யாரிடம் பணம் உள்ளது என்று தெரியும் அவர்களை விடுத்து எதிர்க்கட்சியினரை மிரட்டும் தோணியில் சோதனை செய்து வருகிறார்கள்.

 

 ஒருவரை பணிய வைப்பதற்காக எப்ஐஆர் போடுகிறார்கள்.  அதன் பிறகு அதனை தூக்கி எரிகிறார்கள்.  ராகுல் காந்தி என்னிடம்  தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தமிழகத்தில் தேர்தல் நடைபெறுமா என்ற ஐயம் உள்ளதை அவரிடம் கூறினேன். கடலோர மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியதற்கு அவ்வளவு செல்வாக்கு இருந்தால் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றார். காங்கிரஸ் அடிமை கட்சி என்று கூறும் மோடி இவர்கள் சுதந்திரத்திற்காக ஒரு துரும்பை கூட அசைக்கவில்லை.

 

காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் போராடி சிறையிலே இறந்த வரலாறு உண்டு. பிஜேபி அடிமையினால் வளர்ந்த கட்சி, மாநில பட்டியலில் கல்வியை கொண்டுவரப்படும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு விரும்பினால் நிறைவேற்றுவோம், இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி  மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவில் வெற்றி பெறும் என்றார். இவருடன் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்தார்தன், கட்சியின் அகிலஇந்திய செயற்குழு உறுப்பினர் மனிரத்தினம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம்?

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

Tamil Nadu Congress Committee Chairman Change

 

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பதவி வகித்து வருகிறார். 5 ஆண்டுக் காலம் இந்தப் பதவியில் உள்ள கே.எஸ். அழகிரி மாற்றப்பட்டு அதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. புதியதாகத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களின் பெயர்கள் டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதே சமயம் தமிழகச் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலும் மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

 

 

Next Story

'போக்குவரத்துத் துறை முறைகேடுகளை விசாரிக்க வேண்டும்'- கே.எஸ்.அழகிரி!

Published on 13/12/2020 | Edited on 13/12/2020

 

TAMILNADU CONGRESS COMMITTEE KS ALAGIRI STATEMENT

போக்குவரத்துத்துறை முறைகேடுகளை தமிழக அரசு தாமாக முன் வந்து விசாரிக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வியிடமிருந்து கணக்கில் வராத 117 சவரன் தங்க நகை மற்றும் 24 லட்சத்து 15 ஆயிரத்து 780 ரூபாய் பணமும், மதுரை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்திடமிருந்து 1லட்சத்து 43 ஆயிரத்து 250 ரூபாய் பணமும் இடைத்தரகர் அதுல் பிரசாத்திடமிருந்து ரூ. 7,850   பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

 

அதேபோன்று, சென்னை, ஓசூர், தேனி, ஊத்துக்கோட்டை, நசரத்பேட்டை, வேலூர், தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூர், விழுப்புரம், கோவை உள்ளிட்ட 17 சோதனைச் சாவடிகளில் இன்று ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனைகள் நடத்தியதில் மட்டும் கணக்கில் வராத மொத்தம் ரூ. 30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

போக்குவரத்துத் துறை என்பது இன்று முற்றிலும் ஊழலால் புரையோடிவிட்டதையே இத்தகைய சோதனையும், மீட்கப்பட்ட பணமும், நகைகளும் பிரதிபலிக்கின்றன. இதனால், சாதாரண மக்களால் ஓட்டுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் நீட்டிப்பு போன்றவற்றைக் கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  ஆன்லைன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், போக்குவரத்துத் துறையில் ஊழலுக்கே இடமில்லை என்று அரசு தரப்பில் செய்யப்படும் பிரச்சாரம், கடந்த சில நாட்களாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நடத்தப்படும் சோதனையால் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

போக்குவரத்துத் துறைக்கு  சில தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே ஒளிரும் பட்டை, வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள், ஜி.பி.எஸ். கருவிகள் வாங்க வேண்டும் என  போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டிருப்பதாகவும், இதில் மெகா வசூல் நடப்பதாகவும் தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் புகார் தெரிவித்திருந்தார்.

 

பொதுச் சேவை மற்றும் சரக்கு வாகனங்களில் பெண்கள் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் வாகன கண்காணிப்புக் கருவி பொருத்தும் திட்டத்தில் 5 ஆயிரம் கோடி அளவுக்குத் தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாகச் சர்வதேச சாலை பாதுகாப்பு நிபுணர் டாக்டர் கமல் சோய் குற்றம் சாட்டியுள்ளார். 

 

நடைமுறையைப் பின்பற்றாமல், 8 தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் கருவிகளை வழங்க தன்னிச்சையாக ஒப்புதல் அளித்திருப்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இத்தகைய முறைகேட்டால், பெண்கள் பாதுகாப்பு குறித்த முக்கிய நோக்கம் தோல்வியடைந்துள்ளது.

 

சோதனை செய்வதும், வழக்கு என்ற பெயரில் இழுத்தடிக்கப்பட்டு அந்த சம்பவம் மறந்துபோவதும் தொடர் கதையாகிக் கொண்டிருக்கிறது. ஏதோ, போக்குவரத்துத்துறையில் கீழ்நிலை ஊழியர்கள் தான் இந்த முறைகேட்டில் ஈடுபடுவது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் அளவிலிருந்து சமிக்ஞை வராமல் இத்தகைய முறைகேட்டில் யாரும் ஈடுபடச் சாத்தியமில்லை என்பதே உண்மை. 

 

மேல்மட்டத்திலிருந்து விசாரித்தால் தான், இது போன்ற ஊழலுக்கு முடிவு கட்ட முடியும். தமிழகத்தில் போக்குவரத்துத் துறையில் தான் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஒரு சில போக்குவரத்து அலுவலகங்களில் கணக்கில் வராத இவ்வளவு பெரிய தொகை சோதனையில் சிக்கியிருக்கிறது. சோதனை செய்யாத மாவட்ட போக்குவரத்து அலுவலகங்களில் எத்தனை கோடி ஊழல் நடைபெறுகிறதோ? இது மாநில அளவில் போக்குவரத்து அமைச்சரின் ஆதரவில்லாமல் மாவட்ட அளவில் போக்குவரத்து அலுவலகங்களில் ஊழல் நடக்க வாய்ப்பு இல்லை. இதற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் தான் பொறுப்பு.

 

இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரணையோடு நிறுத்தாமல், இது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமைச்சர் முதல் அதிகாரிகள் வரையிலான தொடர்புகள் வெளிவந்தால் தான், போக்குவரத்துத் துறை மீது படிந்துள்ள கறை நீங்கும்.

 

எனவே, தமிழக அரசு தாமாக முன்வந்து, போக்குவரத்துத் துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரைக்காவிட்டால், நீதிமன்றம் மூலம் சி.பி.ஐ. விசாரணை கோருவோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.' இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.