Tamil Nadu Congress  - MP JyotiMani has the main responsibility

தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக இருந்த முகுல் வாஸ்னிக் மத்தியப்பிரதேச மேலிடப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது தினேஷ் குண்டுராவ் தமிழக மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

அதேபோல் தெலுங்கானா காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்,காங்கிரஸ் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து குலாம்நபி ஆசாத் விடுவிக்கப்பட்டு,காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல்பணிக் குழுவின் உறுப்பினராக எம்.பி ஜோதிமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment