கோமதிக்கு திமுக 10 லட்சம் பரிசு - காங்., 5 லட்சம் பரிசு!

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த கோமதிக்கு திமுக சார்பில் 10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இவரின் சாதனை மென்மேலும் தொடர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.காங்கிரஸ் கமிட்டி சார்பில் 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

k

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், ’’கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதலாவது தங்க பதக்கத்தைப் பெற்றுத் தந்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை கோமதி. இவர் சொந்த ஊரான திருச்சி அருகே உள்ள முடிகண்டம் என்ற கிராமத்தில் கூலித் தொழிலாளியான மறைந்த மாரிமுத்து என்பவருக்கு மகளாக பிறந்தவர். எந்தவித பொருளாதார ஆதரவும் இல்லாமல் கடுமையான உழைப்பின் மூலமாக இந்த பதக்கத்தைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

t

தமிழக வீராங்கனை கோமதி பதக்கத்தை வென்று பெருமை சேர்த்ததை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக பாராட்டுகிறேன். மேலும் அவர் பல விருதுகளை பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன். இவரை ஊக்கப்படுத்துகிற வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

k

Tamil Nadu Congress Committee KS Alagiri komathi
இதையும் படியுங்கள்
Subscribe