Advertisment

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் காலை 10.30 மணியளவில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் உலக மகளிர் தின விழா, மகளிர் காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழக மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளருமான சௌமியா ரெட்டி மற்றும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகளிர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்தியாவின் இரும்புப் பெண்மணி அன்னை இந்திரா காந்தி விருதும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மகளிர் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு ராஜிவ்காந்தி விருதும், கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளை ஊக்குவிக்கும் வகையில் தியாகத் தலைவி அன்னை சோனியா காந்தி விருதும் வழங்கப்பட்டது. மேலும், மருத்துவ முகாம் மற்றும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் கண்தானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.