Advertisment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஐயாவின் 98ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து தனது வாழ்த்தினைத் தெரிவித்தார்.இந்நிகழ்வில் அமைச்சர்கள், மதிமுகபொதுச்செயலாளர்வைகோ, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த போபண்ணா உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தனர்.அதேபோல்பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நல்லக்கண்ணு ஐயாவிற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர்பதிவிலும், "ஆங்கிலேய ஆட்சிக் காலம் தொடங்கி, மதவாத சக்திகளிடம் இருந்து இந்தியாவை மீட்கப் போராடும் இன்றளவும் தொடரும் நெடிய பொது வாழ்வுக்கு சொந்தக்காரர்; 'தகைசால் தமிழர்' தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு 98-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள்!..." என்று பதிவிட்டு நல்லகண்ணு ஐயாவிற்கு தனது வாழ்த்தினைப்பகிர்ந்துள்ளார்.