TAMIL NADU CHIEF SECRETARY DISCUSSION WITH DISTRICT COLLECTORS

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Advertisment

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனையில் சுகாதாரத்துறைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

இந்த ஆலோசனையில், புதிதாக உருமாறிய கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை, ஆன்லைன் பட்டா வழங்கும் திட்டம், பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல் கூறுகின்றன.

நாளை மறுநாள் (28/12/2020) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ள நிலையில், தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment