ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13/08/2022) கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "ஆந்திர மாநிலத்தின் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்காக ஆந்திர அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளின் குடிநீர் வழங்கலைப் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, இவ்வாறு அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், தமிழக அரசினை கலந்தாலோசிக்காமல் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தி ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்". இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.