Tamil Nadu Chief Minister's Governor's meeting abruptly canceled!

Advertisment

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்பொழுது இந்தச் சந்திப்பானது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, ஒவ்வொரு மாதமும் அறிக்கையளிக்க, தமிழக முதல்வர், கிண்டியிலுள்ள ராஜ்பவனுக்குச் சென்று, தமிழக ஆளுனரைச்சந்திப்பது வழக்கம். இன்றும் அதேபோல், தமிழக முதல்வர் மற்றும்ஆளுனர்சந்திப்புதிட்டமிடப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பில், எழுவர் விடுதலை குறித்து, ஆளுநரோடு முதல்வர் ஆலோசிப்பார் எனக் கூறப்பட்ட நிலையில், தற்பொழுது திடீரென இந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.