Advertisment

திருச்சி மாநகர காவல்நிலையத்திற்கு தமிழக முதலமைச்சர் விருது!

Tamil Nadu Chief Minister's Cup for Trichy Municipal Police Station!

Advertisment

தமிழ்நாட்டுக் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களை அங்கீகரித்து ஊக்கப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள்வழங்குவது நடைமுறையில் உள்ளது.

காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையிலும், அந்த வழக்குகளின் மீது கொடுக்கப்பட்ட தீர்வுகள் உள்ளிட்ட பல்வேறு புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். அப்படி அதிக மதிப்பெண் பெறும் காவல் நிலையம் மட்டுமே சிறந்த காவல் நிலையத்திற்கான தமிழக முதலமைச்சர் விருதைத் தட்டிச் செல்லும்.

தற்போது 2019-ஆம் ஆண்டில் சிறந்த காவல் நிலையமாகத் திருச்சி மாநகர கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் 16-வது இடத்தை பெற்றுள்ளது. கோட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் விருதைத் திருச்சி மாநகர காவல் ஆணையர், காவல் ஆய்வாளர் சண்முகவேலிடம் கொடுத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe