Tamil Nadu Chief Minister wishes the President a happy birthday!

Advertisment

இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேபோல், மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதளங்கள் மூலமாக வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், குடியரசுத் தலைவருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "குடியரசுத் தலைவருக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாங்கள் நல்ல உடல்நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன். தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா மற்றும் தலைவர் கலைஞர் படத்திறப்பு விழாவின் போது தாங்கள் காட்டிய அன்பும், அக்கறையும் என் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.