கரோனா பெருந்தொற்று குறைந்ததையொட்டி, இன்று (01/11/2021) சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மடுவின்கரையில் உள்ள மாநகராட்சிப் பள்ளிக்குச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மீண்டும் பள்ளிக்குப் பயில வருகைதந்த மாணவச் செல்வங்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி அன்புடன் வரவேற்றார்.
இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ. வேலு, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.