Advertisment

சங்கரய்யா உடலுக்குத் தமிழக முதல்வர் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என். சங்கரய்யா(102) உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு நேரில் அஞ்சலிசெலுத்தினார்.

Advertisment

என். சங்கரய்யாவின் மறைவிற்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கலைத்தெரிவித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா, அதிமுகவின் வைகைச்செல்வன், திக தலைவர் கி. வீரமணி, திமுகவின் ஆர்.எஸ். பாரதி, சி.பி.எம் எம்பி சு. வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலைப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

mk stalin TNGovernment sankarayya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe