Skip to main content

தமிழக முதல்வரே ராஜினாமா செய்..! முகிலன் சிறையில் உண்ணாவிரதம்!

Published on 11/05/2018 | Edited on 11/05/2018


தமிழகம் முழுவதும் மணல், ஹைட்ரோ கார்ப்பன், மீத்தேன், போன்ற பல பிரச்சனைகளுக்கும் போராட்ட களமிறங்கிய போராளி முகிலன் 236 நாட்களுக்கு முன்பு திடீரென கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் விசாரணை சிறைவாசியாக இருந்து வருகிறார்.

 

 

இந்நிலையில், பல்வேறு நலத்திட்ட பணிகளைத் தொடங்கி வைக்க தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகையை கண்டித்து, பாளையங்கோட்டை சிறையில் இன்று ஒருநாள் உண்ணாவிரதத்தை சுற்றுச்சூழல் போராளி முகிலன் தொடங்கியுள்ளார்.

தனது போராட்டத்திற்கான காரணங்களாக..

மணல் கொள்ளையர்களால் நாங்குநேரி காவலர் ஜெகதீசு துரை கொள்ளப்பட்டதற்கு காரணமான, தேசத்தின் சொத்தான ஆற்று மணலை முறைகேடாகவும், சட்டவிரோதமாகவும் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்காமல் அனுமதித்ததற்கு பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும்,

தமிழக அமைச்சர்கள் முதல் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வரை 33 ஆறுகளையும் பங்கு போட்டு சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடத்துவதை தடுத்து நிறுத்த கோரியும்.

தமிழகத்தின் ஆற்று மணல் முறைகேடாக கொள்ளையடிக்கப்பட்ட பகுதிகளில் பொறுப்பிலிருந்த வருவாய் துறை, காவல்துறை, பொதுப்பணி துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்.

 

 

தமிழ்நாட்டில் புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுக்காமல், வெளிநாட்டு மணலை தடை செய்யாமல் இறக்குமதி செய்ய வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடுவதுடன் ஸ்டெர்லைட் விரிவாக்கத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் மீது புனையப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.

தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகி போல் செயல்படும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும்.

நெடுவாசல் திட்டத்திற்கு மாற்று இடம் கேட்கிறது ஜெம் நிறுவனம். இதுவே மக்கள் சக்தியின் போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் சிறு வெற்றி என்றாலும் அந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

ஹைட்ரே கார்பனுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்கு போடமாட்டோம் என்று சொன்ன தமிழக அரசு இப்போது நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது நம்ப வைத்து ஏமாற்றும் செயலாக உள்ளது. உடனே அந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

சார்ந்த செய்திகள்