Advertisment

வீரபாண்டி ராஜா உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி!

 Tamil Nadu Chief Minister pays tribute to Veerapandi Raja

தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் வீரபாண்டி ராஜா (வயது 58) இன்று (02/10/2021) சேலத்தில் காலமானார். பூலாவரியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அமைச்சர்கள், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினர். அதேபோல், கட்சியின் மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோரும் வீரபாண்டி ராஜா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

இந்நிலையில் சேலத்தில் மறைந்த வீரபாண்டி ராஜா உடலுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பூலாவரியில் உள்ள வீரபாண்டி ராஜாவின் இல்லத்திற்குச் சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதேபோல் அமைச்சர் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி கே.என்.நேரு உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

raja
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe