தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனாதாக்கம் அதிகம் உள்ளமாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் முழுமுடக்கம்அமலில் உள்ளது.அதேபோல்மதுரை மாநகராட்சி பகுதிகளில்30-ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது.சென்னை அல்லாத மற்ற மாவட்டங்களிலும்கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில்கரோனா சிகிச்சைக்கு உயிர்காக்கும் விலை உயர்ந்த மருந்துகளை வாங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுவரை பாதி மருந்துகள் வந்துவிட்டன மீதமுள்ள மருந்துகள் ஒரு நாளில் வந்தடையும், உயிர் காக்கும் மருந்துகள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுஎனசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.