'ஓராண்டு சாதனைகள் ஓவியங்களாய்'-கண்காட்சியை திறந்து வைத்தார் தமிழக முதல்வர்!

Tamil Nadu Chief Minister opens 'One Year Achievements as Paintings' exhibition

கோவை மற்றும் உதகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் நேற்று கோவை சென்றிருந்த நிலையில் இன்று காலை கோவை வ.உ.சி மைதானத்தில் அகழாய்வு கண்காட்சியை திறந்து வைத்தார். அதேபோல் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 'ஓராண்டு சாதனைகள் ஓவியங்களாய்' என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அகழாய்வு கண்காட்சியில் மயிலாடும்பாறை, கொடுமணல், கீழடி,பொருநை ஆகிவைகள் குறித்து கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இன்றிலிருந்து வரும் 25 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் கண்காட்சியைபார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

kovai
இதையும் படியுங்கள்
Subscribe