Advertisment

பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

Tamil Nadu Chief Minister MK Stalin's letter to the Prime Minister!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (15/10/2021) பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய பிரதமருக்கு இன்று (15/10/2021) கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 11/10/2021 அன்று நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள், 13/10/2021 அன்று, பாரம்பரிய மீன்பிடித் தளமாக உள்ள பருத்தித்துறை அருகே இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, காரை நகர் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கைக் கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, இலங்கை மீனவர்களுக்கிடையேயான இந்த நீண்டகாலப் பிரச்சனையில் உடனடியாக இந்திய பிரதமர் தலையிட்டு, இப்பிரச்சனையை நிரந்தரமாகத் தீர்த்திட, உறுதியான வழிமுறைகளைக் காண வேண்டுமென்றும், தமிழ்நாடு முதலமைச்சர் தனது கடிதத்தின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட, இலங்கை அதிகாரிகளிடம் உறுதியாக, தீர்க்கமான முறையில் இந்தப் பிரச்சனையை எடுத்துச் சென்றிட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு வலியுறுத்துமாறு இந்திய பிரதமரை தனது கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், இலங்கைக் கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்திய பிரதமர், உரிய வழிமுறைகளைக் கையாண்டு, இதற்கு நிரந்தரத் தீர்வினைக் காண வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

chief minister Narendra Modi prime minister Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe