Tamil Nadu Chief Minister MK Stalin's action in 'Muthalvan' style!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30/06/2022) ராணிப்பேட்டை மாவட்ட அரசு விழாவிற்கு செல்லும் வழியில் காரைக்கூட்ரோட்டில், சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

Advertisment

மேலும், அவ்வில்லத்தில் உள்ள மாணவர்களிடம் பாடம் நடத்தும் முறைக் குறித்தும், வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். ஆசிரியர்களிடம் அம்மாணவர்களை உயர்கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டும் என்றும், அவர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Advertisment

அந்த இல்லத்தில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்கள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர், ஆய்வின் போது பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் மீது விளக்கம்கோரி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, முதலமைச்சரின் ஆய்வின் போது, குழந்தைகள் நல மையக் கண்காணிப்பாளர் பணியில் இல்லாததால் அவரை சஸ்பெண்ட் செய்ய முதலமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்து சமூக நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த ஆய்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.