Published on 16/05/2021 | Edited on 16/05/2021

மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில், தமிழகத்திலும் கரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் தமிழகத்திற்கான ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீட்டை உயர்த்தியதற்கு மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், ''ரெம்டெசிவிர் மருந்தை 7 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கியதற்கு நன்றி. தற்போதைய சூழலில் உயிர் காக்கும் மருந்து, ஆக்சிஜன் உபகரணங்கள் தேவை இன்றியமையாதது'' என தெரிவித்துள்ளார்.