மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31/03/2022) காலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். அத்துடன், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கினார்.

Advertisment

அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசினார்.

Advertisment

அப்போது துறைச் சார்ந்த கோரிக்கைகளை மத்திய அமைச்சர்களிடம் தமிழக முதலமைச்சர் முன் வைத்தார். மேலும், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கினார். இந்த நிகழ்வின் பொது, தமிழகத்தைச் சேர்ந்த மாநில அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.