மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31/03/2022) காலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.

Advertisment

தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொருநை ஆய்வு நூலின் ஆங்கில பதிப்பையும், இருபத்தி நான்கு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கீழடி ஆய்வு நூலின் இந்தி மொழிப்பெயர்ப்புநூல்களை அவரிடம் வழங்கினார்.

Advertisment