ஆளுநருடன் தமிழ்நாடு முதலமைச்சர் சந்திப்பு!

Tamil Nadu Chief Minister meets Governor!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று (13/10/2021) மாலை 05.00 மணிக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிடம் பெறப்பட்ட அறிக்கை அடிப்படையில், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா கடந்த செப்டம்பர் 14- ஆம் தேதி அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, மசோதாவானது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஆளுநருடனான சந்திப்பின் போது, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரிய மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க முதலமைச்சர் வலியுறுத்த உள்ளதாகத் தகவல் கூறுகின்றன.

இந்த சந்திப்பின் போது, முதலமைச்சருடன், அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

chief minister governor Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe