Tamil Nadu Chief Minister to meet Governor this evening !!

தமிழ்நாடுமுதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (09.06.2021) மாலை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைசந்திக்கிறார்.

Advertisment

இந்த சந்திப்பில் சட்டப்பேரவைக் கூட்டத்தில் உரையாற்ற ஆளுநருக்கு முறைப்படி அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இந்த மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தச் சந்திப்பில் தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் கரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்தும் முதல்வர் ஆளுநரிடம் ஆலோசிக்க இருக்கிறார். முதல்வருடன் தலைமைச் செயலாளர், மருத்துவத்துறைச் செயலாளர் உள்ளிட்டோரும் ஆளுநரை இன்று மாலை சந்திக்க இருக்கின்றனர்.

Advertisment