Tamil Nadu Chief Minister admitted to hospital!

Advertisment

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக முதல்வர் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ''இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கரோனா உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்' எனத் தெரிவித்திருந்தார்.

வரும் 15, 16 தேதி கோவை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது, அதேபோல் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமருக்கு 'செஸ் ஒலிம்பியாட் 2022'க்கான அழைப்பிதழை முதல்வர் நேரில் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக முதல்வருக்கு காவேரி மருத்துவமனையில் சிடிஸ் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அவர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.