தமிழகம் முழுவதும் உள்ளதமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநலச்சங்கம் சார்பில் மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் இன்று (12.12.2022) மனு அளித்தனர்.
அந்த மனுவில் அனலாக் நிலுவைத்தொகைதொடர்பான அறிவிப்புகளைத்தள்ளுபடி செய்ய வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட செட்டாப் பாக்ஸ்களை திரும்பக் கேட்பதையும் உடனே நிறுத்த வேண்டும். கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கான நலவாரியத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் உள்ளமாவட்ட ஆட்சியர்களிடம் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் சார்பில் மனு அளித்து முறையீடு செய்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட திருச்சி மாவட்டதமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள்அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிகழ்வில் திருச்சி மாவட்டத்தலைவர் நாகராஜ், மாவட்டச் செயலாளர் விஷ்ணுவர்தன், மாவட்டப் பொருளாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட பலர்பங்கேற்றனர்.