தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை காலை 9:30 மணிக்கு கூட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், நாளை அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசிக்க இருக்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணை அறிக்கை, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பதற்கான சட்ட மசோதா உள்ளிட்டவைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.