Tamil Nadu cabinet meets today!

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு சில அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் அமைச்சர்களின் துறைகளும் சிலருக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல் ஜாமீனில் வெளியே வந்திருந்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் மீண்டும் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில், அமைச்சரவை மாற்றத்திற்கு பின்பு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (08-10-24) காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. புதிய அமைச்சர்களுக்கு அறிவுரையுடன் பருவமழை ஏற்பாடு, அரசின் திட்டங்கள், தொழில் முதலீடுகளுக்கு அனுமதி தருவது, மதுக்கடைகளை குறைப்பது உள்ளிட்டவை குறித்து தமிழக அமைச்சரவையில் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment