Advertisment

இன்று மாலை கூடுகிறது தமிழ்நாடு அமைச்சரவை!

Tamil Nadu cabinet meets this evening!

புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைமையிலான அரசின், 16வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 21ஆம் தேதி துவங்கியது. கரோனா பரவல் காரணமாக முன்புபோலவே சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்றக் கூட்டத்தொடர்நடைபெற்றது. 21ஆம் தேதி தமிழ்நாடுஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார்.இன்று (24.06.2021) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் தமிழ்நாடுமுதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலளித்துப் பேசினார். அதனையடுத்துகூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், இன்றுடன் தமிழ்நாடு சட்டப்பேரவையின் 16வது கூட்டத்தொடர் முடிவடையும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட இருக்கிறது.இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இரண்டாவது முறையாக நடக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

CABINET MEETING Tamilnadu TNGovernment
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe