Advertisment

நவ.19-ல் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்!

Tamil Nadu Cabinet meeting on November 19!

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வரும் நவம்பர் 19- ஆம் தேதி அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

Advertisment

கூட்டத்தில் வெள்ளச் சேதம், நிவாரணப் பணி, மக்கள் நலத்திட்டங்கள், கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசிப் போடும் பணிகள் உள்ளிட்டவைகுறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கும் பின் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CABINET MEETING chief minister Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe