Tamil Nadu cabinet meeting; Notification of date

தமிழக அமைச்சரவைக் கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று பெங்களூருவில் 26 எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் ஆலோசனைக் கூட்டம் முடிந்த நிலையில், அதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. மறுபுறம், அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணை, ஏற்கனவே செந்தில் பாலாஜியிடம் நடைபெற்று வரும் விசாரணைகள் ஆகியவை சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் வரும் 22 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட இருக்கிறது.

Advertisment

அண்மையில், தமிழக முதல்வர் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத்திட்டம்' தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான முன்னெடுப்புகள் குறித்தும் பேசி இருந்தார். இந்நிலையில் இந்த விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவும், பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுப்பது தொடர்பாக ஆலோசிக்கவும் ஜூலை 22 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட இருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் வரும் 22 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு அமைச்சரவை கூட இருப்பதாகத்தகவல்கள் வெளியாகி உள்ளன.