தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் நவம்பர் 19ஆம் தேதி அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 19ஆம் தேதி அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கூட்டத்தில் வெள்ளச் சேதம், நிவாரணப் பணி, மக்கள் நலத்திட்டங்கள், கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசிபோடும் பணிகள் உள்ளிட்டவை குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், மீண்டும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பொழிய ஆரம்பித்துள்ளதாலும், வெள்ள நிவாரணப் பணிகளை அமைச்சர்கள் மேற்கொள்ளமுதல்வர் உத்தரவிட்டதாலும் நாளை (19 ஆம் தேதி) மாலை 5 மணிக்கு நடைபெற இருந்த கூட்டம் வரும் 20ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.