
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (20/11/2021) இரவு 07.00 மணிக்கு தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.
அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.பன்னீர்செல்வம், பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, க.பொன்முடி, பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் .ராமச்சந்திரன், கீதாஜீவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு, நிவாரண நிதி, சேதமடைந்த பயிர்களுக்கான நிவாரணம், நிதி ஆதாரம், வங்கி, வங்கி அல்லாத நிதிச் சேவைகள், சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களின் கடன் தேவையைப் பூர்த்தி செய்யும் 'FINTECH' திட்டம் உள்ளிட்டவை குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் கூறுகின்றன.
அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும், அவை தொடர்பான அறிவிப்பு கூட்டத்திற்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.