Published on 28/01/2021 | Edited on 28/01/2021

தமிழக சட்டப்பேரவை வரும் பிப்.2 ஆம் தேதி கூடவுள்ள நிலையில், நாளை (29.01.2021) மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட், அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.