Tamil Nadu Cabinet to meet on August 30!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட்- 30 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.

Advertisment

வரும் ஆகஸ்ட் 30- ஆம் தேதி அன்று காலை 11.00 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்று தங்கள் துறைசார்ந்த அம்சங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளனர். மேலும், தமிழக அரசின் தொழிற்கொள்கை, புதிய முதலீடுகளை வரவேற்பதற்கு ஒப்புதல் அளிப்பது, சென்னையில் அமையவுள்ள புதிய விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

குறிப்பாக, ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தைக் கொண்டு வருவது குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.