Advertisment

சிங்கப்பூரில் இருந்து சிலிண்டர்களை கொள்முதல் செய்த தமிழகம்!

Tamil Nadu Chipkot buys 248 cylinders from Singapore

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், தமிழகத்திலும்கரோனா இரண்டாம் அலை காரணமாக நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.இன்றுதமிழகத்தில் ஒரே நாளில் 30,355 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் 293 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு மொத்த எண்ணிக்கை 16,471 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நிலையில், தமிழகத்திலும் குறிப்பாக சென்னையிலும்ஆக்சிஜன் வசதியுடன் கூடியபடுக்கைகள்90% நிரம்பியது மக்கள் மத்தியில் கடும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆக்சிஜன் நிரப்புவதற்கான 248 காலி சிலிண்டர்களை சிங்கப்பூரில் இருந்து கொள்முதல் செய்துள்ளது தமிழக சிப்காட். இந்திய விமானப்படை விமானம் மூலம் 248 காலி சிலிண்டர்களும் இன்று சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன.

Advertisment

Tamilnadu oxygen singapore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe