fg

Advertisment

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ஆம் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், வரும் 13ஆம் தேதி மு.க. ஸ்டாலின் தலைமையிலான தங்கள் ஆட்சியின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. இதற்கிடையே பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து விவாதிப்பதற்காக சபாநாயகர் தலைமையில இன்று (10.08.2021) அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் செப்டம்பர் 21ஆம் தேதிவரை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.