பரகத

தமிழக பட்ஜெட் கடந்த 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன்மீதான விவாதம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது.

Advertisment

பட்ஜெட்டில் பல்வேறு துறைகள் சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதன் மீது அமைச்சர்கள் விளக்கமளிக்க உள்ளனர். சட்டப்பேரவை வரலாற்றில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு முதல் முறையாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதைப்போன்று முதல்முறையாக காகிதம் இல்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் விவாதத்தை தொடர்ந்து துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடைபெற இருக்கிறது. இன்றைக்கு அவை தொடங்கியதும் மறைந்த உறுப்பினர்கள் திண்டிவனம் ராமமூர்த்தி, மதுசூதனன் உள்ளிட்டவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட இருக்கிறது.