Advertisment

தமிழ்நாடு பட்ஜெட் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல்!

Tamil Nadu budget to be tabled on August 13!

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (04/08/2021) காலை 11.00 மணியளவில் தமிழ்நாடுஅமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரை எப்போது தொடங்குவது, பட்ஜெட்டில் இடம்பெறக்கூடிய அறிவிப்புகள் உள்ளிட்டவைகுறித்து முதலமைச்சர் ஆலோசித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

Advertisment

இந்நிலையில், தமிழ்நாடுபட்ஜெட் ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பொது பட்ஜெட் உடன் விவசாய பட்ஜெட்டும் தனியாக தாக்கல் செய்யப்படுகிறது.

Advertisment

தமிழ்நாடுமுதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்ற பின் முதன்முதலாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ள முதல் பட்ஜெட் இதுவாகும்.

chief minister budget Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe