தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இன்று (30.12.2020) சென்னை அண்ணா நகரில் உள்ள விஜயா ஸ்ரீ மகாலில் தமிழக பா.ஜ.க.வின் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாநிலப்பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில்தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. கட்சியின் பொறுப்பாளராகச் செயல்படும் சி.டி.ரவி ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நபர்கள் பா.ஜ.க. கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்..