Advertisment

செல்ஃபி தி.மு.க... சோலோ தினகரன்... ஃபார்மல்ஸ் கருணாஸ்... சட்டப்பேரவை அப்டேட்ஸ்!

Tamilnadu Assembly

2019ஆம் ஆண்டு சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 2ஆம் தேதி காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவைக்கு வந்த அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அதேபோல் எம்எல்ஏக்களும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

Advertisment

dmk mkstalin

Congress

ஆளுநர் உரை தொடங்கியதும் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து திமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்களும், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர் அபுபக்கர் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

Advertisment

T. T. V. Dhinakaran

சட்டப்பேரவையில்சுயேட்சை உறுப்பினரான ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வும், அமமுக துணைப் பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் தனியாக அமர்ந்திருந்து, ஆளுநர் உரையை கவனித்துக்கொண்டிருந்தார்.

ipsenthilkumar

வெளிநடப்பு செய்த திமுகவின் இளம் எம்எல்ஏக்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். ஐ.பி.செந்தில்குமார், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உற்சாகமாக கைகளைஉயர்த்தி காண்பிக்க டி.ஆர்.பி.ராஜா செல்ஃபி எடுத்தார்.

karunas

எப்போதும் வெள்ளை வேஷ்டி வெள்ளை முழுக்கை சட்டையோடு வரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை எம்எல்ஏவுமான நடிகர் கருணாஸ் இன்று பேண்ட் ஷர்ட் அணிந்து இன்ஷர்ட் பண்ணி ஃபார்மல்ஸில் வந்திருந்தார்.

updates assembly Tamil Nadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe