
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரங்கள், கூட்டணிஎனகளத்தில் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான ஆலோசனையைஇந்தியத் தலைமை தேர்தல் ஆணையம்கடந்த11.02.2021அன்று2-வது நாளாக சென்னையில் நடத்தியது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராபங்குபெற்றார்.
இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி பிப்ரவரிஇறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏப்ரல்இறுதி வாரத்தில் ஒரே கட்டமாகதேர்தல் நடத்தப்படும் எனவும், மே10 ஆம் தேதிக்குமேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்எனவும்தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow Us