Published on 16/02/2021 | Edited on 16/02/2021

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரச்சாரங்கள், கூட்டணி என களத்தில் தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான ஆலோசனையை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 11.02.2021 அன்று 2-வது நாளாக சென்னையில் நடத்தியது. அதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையில் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பங்குபெற்றார்.
இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏப்ரல் இறுதி வாரத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும், மே 10 ஆம் தேதிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.