தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உருவப்படம் திறக்கப்படுகிறது. இன்று (02/08/2021) மாலை 05.00 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறும் விழாவில், முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உருவப்படம் திறந்துவைக்கப்படுகிறது. விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். சட்டமன்ற நூற்றாண்டு விழாவையொட்டி தலைமைச் செயலகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாகாணத்தில் 1921ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அன்று சட்டமன்றம் தொடங்கிவைக்கப்பட்டது. இதை நினைவுப்படுத்தும் வகையில் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.