Skip to main content

“தமிழக விமான நிலையங்களை ரூ. 7,000 கோடியில் மேம்படுத்த முடிவு” - சஞ்சிவ் ஜிந்தால் 

Published on 26/04/2022 | Edited on 26/04/2022

 

“Tamil Nadu airports will be charged Rs. 7,000 crore to be upgraded ”- Sanjiv Jindal

 

திருச்சி சர்வதேச விமானநிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய முனைய கட்டுமானப் பணிகளை நேற்று ஆய்வு மேற்கொண்ட சஞ்சிவ் ஜிந்தால், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, “திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டுமானப் பணிகள் ரூ. 951 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019ம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. கரோனா, பருவகால மாற்றங்கள் உள்ளிட்டவைகளால் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க முடியவில்லை. இந்நிலையில் 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முழு பணிகளையும் நிறைவு செய்து, முனையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் ரூ.951 கோடி மதிப்பிட்டில் தொடங்கப்பட்டது. ஆனால் கோவிட் பொதுமுடக்கத்துக்கு பின்னர் ஏற்பட்ட கட்டுமான பொருட்களின் கடுமையான விலையேற்றத்தால் முனைய கட்டுமான மதிப்பீடு ரூ.1,000 கோடியாக உயர வாய்ப்புள்ளது.

 

திருச்சி விமான நிலையத்தைப் பொறுத்த வரையில் அனைத்துமே தரமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மின் விளக்குகள், நகரும் குளிர்சாதனம், கண்காணிப்பு கேமரா, தானியங்கி நகரும் படிக்கட்டுகள், தண்ணீர் பயன்பாடு என அனைத்துமே தானியங்கி முறையில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போதுள்ள முனையத்தை விட 1.5 மடங்கு அளவில் பெரியதாகவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களை கையாளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 

திருச்சி விமானநிலையம் தான் நாட்டிலேயே மிகவும் அழகான விமானநிலையமாக இருக்கும். புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்ததும், பழைய முனையம் கண்காணிப்பு மையம், பயிற்சிகள், மற்றும் இதர பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும். தற்போதுள்ள சூழலில் சுமார் 70 சதவிகித பணிகள் முற்றுப்பெற்றுள்ளன. மீதி 30 சதவிகித பணிகள் ஜூன் 2023க்குள் முடிக்கப்படும்.

 

தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.7,000 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளன. தூத்துக்குடி விமானநிலையத்தில் ஓடுதளம், புதிய முனையம், வான் கட்டுப்பாட்டு அறை, தீயணைப்பு நிலைய விமான ஓடுதளத்தின் நீளம் 1,350 மீட்டரிலிருந்து 3,115 மீட்டராக உயர்த்தப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்ததும் கோவை, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களில் பெரியரக விமானங்களை கையாள முடியும். இதேபோல சேலம், வேலூர் விமான நிலையத்திலும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை விமானநிலைய விரிவாக்கத்துக்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன” என்றார்.


திருச்சி விமான நிலைய இயக்குநர் தர்மராஜ் கூறுகையில், “திருச்சி, விமானநிலைய விரிவாக்கத்துக்காக கொட்டப்பட்டு, கிழக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் இதுவரை 40.93 ஏக்கர் நிலம் விமான நிலையத்துக்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 40 ஏக்கர் நிலம் ஜூன் மாதத்துக்குள் கையகப்படுத்தப்படும். நீதிமன்ற வழக்குகள் மற்றும் சில தடைகள் உள்ளிட்டவைகளால் இதில் தாமதம் நிலவியது. நிலங்களை கையகப்படுத்துவதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.