Advertisment

த.மா.கா. இளைஞர் அணி சார்பில் மக்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது!

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு இந்தியாவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், 107 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனை இந்திய அரசு பேரிடராக அறிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று (14/03/2020) தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி சார்பில் ஈரோடு ரயில் நிலையத்தில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநில தலைவரான ஈரோடு யுவராஜ்ரயில் பயணிகளுக்கு முகக்கவசம் வழங்கினார்.

Advertisment

TAMIL MANILA CONGRESS PARTY FREE MASKS PEOPLES IN ERODE JUNCTION

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

>

பிறகு யுவராஜா செய்தியாளர்களிடம் பேசும்போது, "மனித குலத்தை அச்சுறுத்தி வரும் இந்த கரோனா வைரஸ் நமது இந்தியாவிலும் அதன் ஆபத்தைத் தொடங்கியுள்ளது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் ரயில் பயணிகளுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது இந்த முகக் கவசத்திற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

TAMIL MANILA CONGRESS PARTY FREE MASKS PEOPLES IN ERODE JUNCTION

இதற்கு முன்பு இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட முகக் கவசம் இப்போது திடீரென விலை ஏறி 20 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதை உடனடியாக தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இதைக் கூடுதல் விலைக்கு விற்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முகக்கவசங்களை அத்தியாவசிய பொருளாக அறிவித்து பொது மக்களுக்கு அரசு மருத்துவமனைகள், ரேஷன் கடைகளில் முகக்கவசத்தை இலவசமாகவே வழங்க வேண்டும்.

இதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். ரயில் நிலையம், பேருந்து நிலையம் என மக்கள் கூடும் இடங்களில் த.மா.க.இளைஞர் அணி வழங்கிய முகக் கவசம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

peoples tamil manila congress Mask Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe