/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn govt6_0 (1)_2_2.jpg)
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு 2022- 2023 ஆம் கல்வியாண்டு முதல் நடத்தப்படும். தமிழ் திறனறிவுத் தேர்வுக்கு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.inஎன்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பள்ளி மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் 1,500 மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். 10- ஆம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தேர்வு நடத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கிய ஆற்றல் மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்க தமிழ் ஒலிம்பியாட் தேர்வு நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)