/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madura (1).jpg)
மத்திய அரசின் தொல்லியல் துறை பட்டயப்படிப்புக்கான அறிவிப்பில் செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிப்புக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது.
மனுதாரர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், 'மத்திய அரசின் தொல்லியல் துறை பட்டயப்படிப்புக்காக ஏற்கனவே வெளியிடப்பட்ட பழைய அறிவிப்பை ரத்து செய்து செம்மொழி வரிசையில் தமிழைசேர்த்து அறிவிப்பு வெளியிட வேண்டும்' என்று முறையிட்டார்.
இதனை ஏற்ற நீதிபதி, முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நாளை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Follow Us