Tamil fans shocked as Hindi song was broadcast on All India Radio

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையின் கீழ் செயல்பட்டு வரும் அகில இந்திய வானொலியில் இரவு நேரங்களில் தமிழ் திரைப்படப் பாடல்கள் இசைக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.. ஆனால், திடீரென இரவு 11 மணி முதல் அதிகாலை 5.45 மணி வரையிலான நேரத்தில் அகில இந்திய வானொலியில் தமிழ் ஒலிபரப்புகள் முற்றிலுமான நிறுத்தப்பட்டு இந்தி பாடல்கள் ஒலிபரப்படுகின்றன . இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுநர்கள், வாகன ஓட்டிகள் தங்களின் தூக்கத்தை மறந்து பணியாற்றுபவர்கள் அகில இந்திய வானொலியில் ஒலிப்பரப்படும் தமிழ்பாடல்களை கேட்டு வேலை பார்த்து வந்தனர். ஆனால், தற்போது தமிழ்பாடல் நிறுத்தப்பட்டு இந்தி பாடல்கள் ஒலிபரப்பப்படுவதும் தமிழ் நேயர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

Advertisment

ஒவ்வொரு திட்டத்தின் வழியாக இந்தியை திணிக்கும் மத்திய அரசு தற்போது அகில இந்திய வானொலி மூலமாகவும் அதனை தொடர்வதாக பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்.