Tamil culture in Kamal's voice

Advertisment

மாமல்லபுரத்தில் நடைபெறும் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் இன்று (28/07/2022) தொடங்குகின்றன. தற்பொழுது ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டையுடன் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். நிகழ்வில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், எல்.முருகன், தமிழக ஆளுநர், தமிழக அமைச்சர்கள், திமுக எம்பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, எம்.எல்.ஏ உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தற்பொழுது விழாவானது நாட்டுப் பண் உடன் தொடங்கியது.

தமிழகத்தின் சிறப்புகள், கலாச்சாரம், கலைகள் குறித்த சிறப்புத் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டது, நடிகர் கமல்ஹாசனின் குரலில், கலைஞர்களின் நடனம் மூலம் வெளிப்படுத்தப்பட்ட இந்த தொகுப்பு அங்கு இருந்தவர்களைஉற்சாகத்தில் ஆழ்த்தியது. கல்லணை,சிலப்பதிகாரம், ஏறு தழுவுதல், ஜல்லிக்கட்டு உள்ளிட்டதமிழகத்தின்சிறப்புகளும் அதில் இடம்பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து 'என்ஜாயி எஞ்சாமி' பாடல் ஒலிக்கப்பட்டு நடனம் அரங்கேற்றப்பட்டது.