
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இலங்கை பிரதமராக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார். ஆளும் கட்சி உடைந்ததால் இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டு ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இது குறித்து நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பார் சீமான்கூறும்போது,
இது அவர்களுக்குள்ளான அரசியல் விளையாட்டு. இதில் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் வரப்போவதில்லை.முன்பு இருந்ததை விட மிக மோசமான சூழல், பின்னடைவுதான்அங்கு நமக்கு நிலவுகிறதே தவிர ஒரு மாற்றமும் வரப்போவதில்லை. ராஜபக்சே இப்போது பிரதமராகி உள்ளார் என்பதைவிட அடுத்த தேர்தலில் அவர் அதிபராகக்கூட ஆக்கப்படுவார். இதில் ஆச்சர்யமோ வியப்போ இல்லை எனக்கூறினார்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)